• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ajith: திரைப்பட தொழிலாளர்களுக்கு கொரோனோ நிவாரணமாக அஜித் 10 லட்சம் நிதியுதவி!

Ajith: திரைப்பட தொழிலாளர்களுக்கு கொரோனோ நிவாரணமாக அஜித் 10 லட்சம் நிதியுதவி!

அஜித்

அஜித்

நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் நலிந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

  • Share this:
நடிகர் அஜித் திரைப்பட கலைஞர்களுக்காக 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

சினிமா படபிடிப்பு தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகத்தில் கொரனோவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் முதல்வரை சந்தித்து 3 கோரிக்கைகளை விடுத்திருந்தோம். அதில் படபிடிப்பு நடத்தக்கோரியும், தமிழ்நாடு திரைப்பட உரிமையளர்களுக்கு 2 ஆயிரம் வழங்ககோரியும் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த தனியாக மையம் அமைக்ககோரியும் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது கொரனோவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் படபிடிப்பு நடத்தக்கோரி அளித்த கோரிக்கையை திரும்ப பெறுவதாகவும், தற்போது உள்ள நிலையில் மே 31-ம் தேதி வரை படப்பிடிப்பில் ஈடுபடவில்லை என்றார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எந்த நிகழ்விலும் திரைப்பட துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட போவதில்லை என்றார். அதன்பிறகு நிலைமையை கருதி முடிவு எடுக்கபடும் என்றார். எனவே முதல்வரிடம் அளித்த மற்ற 2 கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகொள் விடுத்துள்ளோம்.

நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் நலிந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார். இந்தியன் 2 விபத்திற்கு பிறகு திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் முக்கியமானது என்றாலும் அது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கவில்லை என்றார்

நடிகர் அஜித் திரைப்பட கலைஞர்களுக்காக 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். அதே போல இயக்குனர் மணி ரத்னம் அவர்களும் நடிகர்களை வைத்து படம் இயக்கி அதற்கான தொகை 10 கோடி வழங்கியதாக தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: