Home /News /entertainment /

வலிமை படத்தைப் பற்றி அஜித்தின் அண்ணன் அனில் குமார் என்ன சொன்னார் தெரியுமா?

வலிமை படத்தைப் பற்றி அஜித்தின் அண்ணன் அனில் குமார் என்ன சொன்னார் தெரியுமா?

அஜித் குடும்பம்

அஜித் குடும்பம்

வலிமை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

    நடிகர் அஜித்தின் அண்ணன் அனில் குமார், வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ’நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வலிமை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து ரசிகர்களும், தயாரிப்பு தரப்பும் பல்வேறு ப்ரொமோஷன் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் அண்ணன் அனில் குமார், தான் வலிமை முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    பாரதி கண்ணம்மாவால் நிறைய இழந்தேன் - அஞ்சலி உருக்கம்



    வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “வலிமை புதுப்பிப்பைப் பற்றி எப்பொழுதும் என்னிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால் எரிச்சலடைவீர்கள். இருப்பினும் நான் இப்போது ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். வலிமை படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith, Valimai

    அடுத்த செய்தி