Home /News /entertainment /

Ajith: 3-வது முறையாக இணைகிறதா வலிமை கூட்டணி?

Ajith: 3-வது முறையாக இணைகிறதா வலிமை கூட்டணி?

போனி கபூர் - அஜித்

போனி கபூர் - அஜித்

மீண்டும் வலிமை கூட்டணி இணைந்து பணியாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி இணைந்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைய மீண்டும் தனது சொந்தக் கதையை அஜித்தை வைத்து இயக்க ஹெச்.வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

‘வலிமை’ என்ற டைட்டில் உடன் உருவாகும் இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று சண்டைக் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. அதேவேளையில் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தை அடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாகவும், ‘வலிமை’ படத்தின் ரிலீசுக்குப் பின் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து சிவாவுடன் இணைந்து பணியாற்றிய அஜித், ஹெச்.வினோத்துக்கும் தொடர்ந்து வாய்ப்பளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Ajith, Valimai

அடுத்த செய்தி