காதல் கோட்டை 25: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

காதல்கோட்டை

இதயத்தில் தொடங்கி கண்களில் முடியும் வகையில் பார்க்காமலேயே காதல் என்ற புது ‘ஃபார்முலா’வை கொண்டு அகத்தியன் இயக்கியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

  • Share this:
காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

நடிகர் அஜித் , நடிகை தேவயானி ஆகியோர் நடித்து கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வெளியான திரைப்படம் காதல் கோட்டை. சிவசக்தி மூவி மேக்கர்ஸ்  நிறுவனம் தயாரிப்பில், அகத்தியன் இயக்கிய இந்த படத்துக்கு இயக்குநர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.  இதயத்தில் தொடங்கி கண்களில் முடியும் வகையில் பார்க்காமலேயே காதல் என்ற புது ‘ஃபார்முலா’வை கொண்டு அகத்தியன் இயக்கியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  காதலின் புதிய பரிமாணத்தை தமிழ் திரையுலகத்துக்கு இந்த படம் மூலம் அகத்தியன் அறிமுகப்படுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்



சூர்யா- கமலி கதாபாத்திரங்கள் அமர காதலர்களாக கொண்டாடப்பட்டனர். அதுவரை சுமாராக இருந்த அஜித்குமாரின் மார்க்கெட்டை நட்சத்திர அந்தஸ்துக்கு எடுத்து சென்ற படமும் காதல் கோட்டைதான்.  தேவயானியும் தனது நடிப்பில் அனைவரையும் கவர்த்திருந்தார். ஹீரா, தலைவாசல் விஜய், மணிவண்ணன், கரண் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பார்கள்.

இதையும் படிங்க: சாதனை படைத்த அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர்!


தேவா இசையமைப்பில் காலமெல்லாம் காதல் வாழ்க, நலம் நலமறிய ஆவல், சிவப்பு லோலாக்கு போன்ற மெல்லிசை பாடல்களும், கவலைப்படாதே சகோதரா, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா ஆகிய குத்து பாடல்களும் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தன.

வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம், தேசிய விருதுகளையும் விட்டுவைக்கவில்லை. சிறந்த  தமிழ் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றது.

மேலும் படிக்க: வலிமை’யில் நடித்தது குறித்து ‘குக் வித் கோமாளி’ புகழ் ட்வீட்!




காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துள்ளன.  இதையொட்டி அஜித் ரசிகர்கள் இத்திரைப்படத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.  இயக்குநர்கள் அகத்தியன், தங்கர்பச்சான், சித்ரா லட்சுமணன், நடிகை தேவயானி, நடிகர் தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் தேவா உட்பட படக்குழுவினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.  படத்தின் கதாநாயகன் அஜித் மட்டும் இந்த கொண்டாட்டத்தில் மிஸ்ஸிங்.
Published by:Murugesh M
First published: