முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ரசிகர்களை என்றுமே சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை' - அஜித் ; வைரலாகும் பிறந்தாள் பதிவு

'ரசிகர்களை என்றுமே சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை' - அஜித் ; வைரலாகும் பிறந்தாள் பதிவு

அஜித்

அஜித்

நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. - அஜித்

  • Last Updated :

ரசிகர்களை என்றுமே சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை என்று நடிகர் அஜித் வெளியிட்ட பிறந்த நாள் அறிக்கை மீண்டும் தற்போது வைரலாகி வருகிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு சோஷியல் மீடியாவின் தாக்கம் அதிகம் இல்லாத சூழலில் இன்று அஜித்தின் பதிவை வெளியிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஏப்ரல் 29, 2011- அன்று அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து அறிவிப்பு வெளியிட்டார். பிறந்த நாள் அறிக்கையாக அஜித் இந்த முடிவை அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பிறந்த நாள் அறிக்கையில், 'நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை. எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை. பயன்படுத்தவும் மாட்டேன்.

இதையும் படிங்க - அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகிறது AK61 படத்தின் டைட்டில்...

நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் - சரியாக இல்லாவிட்டால விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையயூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம். நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பது எனது கருத்து.

வருகிற மே 1-ம்தேதி (2011)என்னுடைய 40-வது பிறந்த நாள் முதல் எனது தலைமையில் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித் குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறி வரும் கால கட்டத்தில் பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் கவுரவம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப். 2 மேக்கிங் வீடியோ ரிலீஸ்... ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் கேமரா டீம்

அந்த கவுரவமும், எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும் எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்' என்று அஜித் தெரிவித்திருந்தார்.

top videos

    இதே நாளில் அன்று அஜித் வெளியிட்ட அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: Actor Ajith