நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இதனையடுத்து விரைவில் படம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். அதோடு பொது இடங்களில் வலிமை அப்டேட்டை கேட்கும் ரசிகர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாகவும், அவர்கள் கண்ணியத்தை பின்பற்றவில்லை என்றும் அஜித் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ சீரியல் நடிகர் புவியரசு திருமணம்!
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித்தின் பில்லா திரைப்படம் மார்ச் 12 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. அஜித் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டதால், பில்லா அஜித் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் பில்லா திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இப்படத்தில் நயன்தாரா, ரஹ்மான், பிரபு, நமீதா, சந்தானம், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்