Home /News /entertainment /

வீடியோ : நான் என்ன கொலைகாரனா? கொள்ளக்காரனா? ரசிகர்களை கிண்டல் செய்த அஜித்…

வீடியோ : நான் என்ன கொலைகாரனா? கொள்ளக்காரனா? ரசிகர்களை கிண்டல் செய்த அஜித்…

அஜித்

அஜித்

தற்போது இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். அவர்களில் பலரது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக இந்த வீடியோ மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பைக்கில் சாகசப் பயணத்தை அஜித் மேற்கொண்டிருக்கும் நிலையில் முதன் முறையாக அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில் தன்னை பின் தொடரும் ரசிகர்களிடம் நான் என்ன கொலகாரனா கொள்ளக்காரனா என்று கிண்டலாக கேட்கிறார் அஜித். இந்த வீடியோவுக்கும் லைக்சும், ஷேரும் குவிந்து வருகிறது.

ஏகே 61 படத்திற்கான ஷூட்டிங் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், அஜித் தற்போது இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றும் சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் லடாக்கில் பல்வேறு பகுதிகளை சுற்றி வருகிறார்.

RK Suresh: ஆர்.கே.சுரேஷ் மகளின் க்யூட் படங்கள் - பாப்பா பேரு என்ன தெரியுமா?

இதுதொடர்பான புகைப்படங்கள் அன்றாடம் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்த சாகச பயணத்தில் சில நாட்களுக்கு முன்பாக நடிகை மஞ்சு வாரியரும் இணைந்தார். இவர்தான் அஜித் நடித்து வரும் படத்தின் ஹீரோயின்.



இந்நிலையில், தற்போது 30 வினாடிகள் ஓடக் கூடிய அஜித்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கோவையில் இருந்து வந்த இளைஞர்கள் லடாக்கில், அஜித்தை 3 நாட்களாக தேடிக் கொண்டிருந்ததாக கூறுகின்றனர். இதைக் கேட்ட அஜித், தேடிட்டு இருந்தீங்களா.. நான் என்ன கொலகாரனா கொள்ளக் காரனா என்று கிண்டலாக கேட்கிறார்.



பின்னர் அந்த இளைஞர்கள் அஜித்திடம் தங்களது பயண விபரங்களை கூறுகின்றனர். அதை பொறுமையாக கேட்கிறார் அஜித். தற்போது இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். அவர்களில் பலரது வாட்ஸ்ஆப்  ஸ்டேட்டஸாக இந்த வீடியோ மாறியுள்ளது.

இன்றைய கால நடிகர்களை விமர்சித்த அருண் பாண்டியன்

ஏகே 61 படத்திற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் தாய்லாந்து செல்லவுள்ளனர். அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பணிகள் வேகம் எடுத்தால், வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் ஏகே 61 மோத அதிக வாய்ப்புகள் உள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி