திருமண விழா ஒன்றில் அஜித்தும், சூர்யாவும் இணைந்து மணமக்களை வாழ்த்தும் படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
நடிகர்கள் அஜித்தும், சூர்யாவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
இவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு எழும்.
சமீபத்தில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகியப் படங்கள் வெளியாகின.
இரண்டு படங்களுமே அந்ததந்த நடிகர்களின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது.
அஜித், சூர்யா இருவருமே நல்ல குடும்ப நண்பர்களாக உள்ளனர்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா, தனது முதல் படமான வாலியில் அஜித்துடன் இணைந்து நடித்தார்.
இந்நிலையில் திருமணம் ஒன்றில் அஜித்தும், சூர்யாவும் மணமக்களை இணைந்து வாழ்த்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.