மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் அஜித் - வீடியோ

அவரது அப்பா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது. 

மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் அஜித் - வீடியோ
அஜித்
  • Share this:
முகக்கவசம் அணிந்தபடி மருத்துவமனையிலிருந்து நடிகர் அஜித் வெளியேறும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்திருப்பதாகவே தெரிகிறது.

கொரோனா ஊரடங்கின் போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்த போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பொதுவான உடல் பரிசோதனை செய்து கொள்ளும் அஜித், அதற்காகவே மருத்துவமனை சென்று வந்ததாக கூறப்படுகிறது


இதனிடையே வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் பணியாற்றிய மூவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களான குஷி கபூர், ஜான்வி கபூர் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பின்றி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் சினிமா தொழிலாளர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு முடியும் வரை வலிமை படப்பணிகளை தொடங்க வேண்டாம் என்று அஜித், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் வலியுறுத்தியதாகவும் பேச்சு அடிபட்டது.
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading