Home /News /entertainment /

Thunivu: அஜித்தின் ஏகே61 படத்திற்கு ’துணிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Thunivu: அஜித்தின் ஏகே61 படத்திற்கு ’துணிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

துணிவு

துணிவு

ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் அஜித் நடித்துள்ள 61-வது படத்துக்கு ’துணிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    கடைசியாக நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் வெளியானது. அதிக பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

    இதையடுத்துஅஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் சென்றிருந்தார். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வட இந்தியாவில் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றிருந்த அஜித்தின் பல புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்தன.

    இருப்பினும் ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை டேக் செய்து ஏகே61 படத்தின் டைட்டிலை வெளியிடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் அஜித் ரசிகர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    இந்நிலையில் தற்போது அஜித்தின் 61-வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘துணிவு’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ’நோ கட்ஸ் நோ க்ளோரி’ என்ற டேக் லைனுடன் வெளியாகியிருக்கும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் முழுக்க முழுக்க வெள்ளை முடி மற்றும் தாடியுடன் மாஸாக காட்சியளிக்கிறார் அஜித்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி