Home /News /entertainment /

AK61: அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?

AK61: அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?

அஜித்

அஜித்

சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் சென்றிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அஜித்தின் ஏகே61 படத்துக்கு ’துணிவே துணை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கடைசியாக நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் வெளியானது. அதிக பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

    இதையடுத்துஅஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் சென்றிருந்தார். அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. வட இந்தியாவில் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றிருந்த அஜித்தின் பல புகைப்படங்களும், வீடியோக்களும் அவரது ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட உணர்வை தந்தன. அந்த ட்ரிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டார் அஜித்.

    மகாலட்சுமியால் டன்சோ டெலிவரி பாயான ரவீந்தர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே ஏகே61 படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்துக்கு ‘துணிவே துணை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி