Home /News /entertainment /

AK61: ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்?

AK61: ஸ்ரீதேவி பிறந்தநாளில் வெளியாகும் அஜித்தின் AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்?

அஜித் - ஸ்ரீதேவி

அஜித் - ஸ்ரீதேவி

ஐரோப்பா ட்ரிப்பில் இருக்கும் அஜித், பயணத்தை முடித்துக் கொண்டு ஏகே61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அஜித் நடித்துள்ள AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடைசியாக நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் வெளியானது. அதிக பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

    இதையடுத்து அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் அவரின் தோற்றம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஆனால் படத்தின் க்ளைமாக்ஸுக்கு அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால், அதை வெளியில் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்க அஜித்தும் படக்குழுவினரும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

    ஹாலிவுட்டில் ரீமேக்காகும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7!

    இதற்கிடையே ஐரோப்பா ட்ரிப்பில் இருக்கும் அஜித், பயணத்தை முடித்துக் கொண்டு ஏகே61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13-ம் தேதி AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ஸ்ரீதேவியின் காதல் கணவரும் படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Tamil Cinema

    அடுத்த செய்தி