Home /News /entertainment /

சென்னைக்கு மாற்றப்பட்ட அஜித்தின் ஏகே61 படப்பிடிப்பு

சென்னைக்கு மாற்றப்பட்ட அஜித்தின் ஏகே61 படப்பிடிப்பு

அஜித்

அஜித்

ஏறக்குறைய ஒரு மாதமாக படப்பிடிப்புக்கு பிரேக் எடுத்திருந்த அஜித்தை, மீண்டும் 'ஏகே 61' செட்டில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அஜித்தின் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அஜித் தனது 61-வது படத்திற்காக மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'அஜித் 61' மற்றும் 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் இதன் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, 'அஜித் 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. புனேயில் நடத்தத் திட்டமிட்டிருந்த 'அஜித் 61' படத்தின் அடுத்தப் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையில் படப்பிடிப்பை முடித்ததும், புனே ஷெட்யூலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    ஏறக்குறைய ஒரு மாதமாக படப்பிடிப்புக்கு பிரேக் எடுத்திருந்த அஜித்தை, மீண்டும் 'ஏகே 61' செட்டில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் த்ரில்லர் படமான இதில், அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சில பிரபலமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார்.

    ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'அஜித் 61' படம் முதலில் 2022 தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளி போயுள்ளது. இதையடுத்து படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி