Home /News /entertainment /

Ajith 61: அஜித் 61 படத்தின் அட்டகாச அப்டேட்!

Ajith 61: அஜித் 61 படத்தின் அட்டகாச அப்டேட்!

அஜித்

அஜித்

அஜித் 61 படத்தின் அடுத்துக்கட்ட படப்பிடிப்பு நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அஜித் நடிக்கும் அவரின் 61-வது படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. 

நேர்கொண்ட பார்வை,  வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில், நடிகர் அஜித் கலந்து கொண்டு நடித்தார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அவர் தன் குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.  அதை முடித்து சென்னை திரும்பிய நடிகர் அஜித் ஓய்வெடுத்து வந்தார்.

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

இதையடுத்து அஜித் 61 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நடிகர் அஜித் நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அந்த படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன.  அத்துடன் படத்தின் முழு படப்பிடிப்பையும் விரைவில் முடிக்க இயக்குநர் எச்.வினோத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்த வருகிறார் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

 

 
Published by:Shalini C
First published:

Tags: Ajith

அடுத்த செய்தி