நடிகர் அஜித் குமார், இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற 'வலிமை' திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அதே கூட்டணியின் கீழ் 'ஏகே61' திரைப்படம் உருவாகி வருகிறது. வலிமை திரைப்படத்தை போல் இல்லமால், ஏகே61 திரைப்படம் குறித்த அப்டேட்கள் அடிக்கடி வெளியான வண்ணம் உள்ளது. அதிலொரு பகுதியாக படத்தின் தயாரிப்பாளர் ஆன போனி கபூர், தன் பங்கிற்கு ஒரு தரமான அப்டேட்டை வழங்கி உள்ளார்.
போனி கபூர் அளித்த பேட்டி ஒன்றில், ஏகே61 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் முடிவடையும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் மொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாகவும் தகவல் அளித்து உள்ளார். இதைல்லாம் வைத்து பார்க்கும் போது படப்பிடிப்பு முடிந்ததும், ஏகே61 திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும், அது முடிந்ததும் 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஏகே61 திரைப்படம் தியேட்டருக்கு வரும் என்று நாம் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை!
ஏகே61 படத்தில் அஜித் குமார் உடன் கவின், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி போன்றவர்களும் நடிக்கிறார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் கதை, வங்கி கொள்ளை மற்றும் அது தொடர்பான மோசடியை மையமாக கொண்டது என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது (முன்னதாக அனிருத் என்று கூறப்பட்டது).
கிடைக்கப்பெறும் அப்டேட்களை வைத்து, வலிமை திரைப்படத்துடன் ஒப்பிடும் போது ஏகே 61 படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியான வண்ணம் உள்ளன. இருந்தாலும் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆனது அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்!
முன்னதாக வெளியான வலிமை, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து இருந்தாலும் கூட தியேட்டரில் ரிலீஸ் ஆன வேகத்திலேயே டிவிக்கு வந்தது என்றே கூறலாம். வலிமை திரைப்படத்தை அஜித் குமாரின் ரசிகர்கள் மட்டுமே கொண்டாடி தீர்த்தன; அதிலும் சிலர் "எதிர்பார்த்த அளவு இல்லை" என்கிற விமர்சனத்தையும் முன்வைத்தனர். இதன் விளைவாக வலிமை திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. அதை தொடர்ந்து அஜித் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று ஜீ தமிழ் சேனலில் உழைப்பாளர் தின சிறப்பு திரைப்படமாகவும் ஒளிபரப்பானது.
மனைவி ஆர்த்தியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் - லைக்ஸை குவிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!
நினைவூட்டும் வண்ணம் அஜித் குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் தொடர்ச்சியாக உருவாகும் மூன்றாவது படமே ஏகே 61 ஆகும். வலிமை திரைப்படத்திற்கு முன்னதாக இந்த கூட்டணி நேர்கொண்ட பார்வை என்கிற திரைப்படத்தை உருவாக்கி இருந்தது; அது ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படித்தான் பாலிவுட் தயாரிப்பாளர் ஆன போனி கபூர் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.