அஜித்தின் அடுத்தப்படமான AK61-ற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கியிருப்பதாக, தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அஜித்தின் மாதிரி தோற்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.
அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் புதிய படத்தை தொடங்க உள்ளார். இதை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவிருக்கிறார். அஜித் - வினோத் - போனி கபூர் இணையும் மூன்றாவது படமாக இது உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில் அஜித்தின் 61-வது படத்திற்கான வேலைகள் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டு, அஜித்தின் மாதிரி தோற்ற
படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர். முழுக்க முழுக்க நரைத்த முடி, மீசை மற்றும் தாடியுடன் அந்தத் தோற்றம் உள்ளது.
Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!
அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!
இது தவிர, நடிகர் அஜித் தற்போது
வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க, கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், ராஜ் ஐயப்பா, சுமித்ரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.