Home /News /entertainment /

AK61 படப்பிடிப்புக்கு இடையே லண்டன் சென்ற அஜித் - காரணம் இதுதான்!

AK61 படப்பிடிப்புக்கு இடையே லண்டன் சென்ற அஜித் - காரணம் இதுதான்!

அஜித்

அஜித்

'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    ஏகே 61 படப்பிடிப்புக்கு இடையே அஜித் லண்டன் சென்றது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு படத்திற்கு தற்காலிகமாக 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் 'AK 61' படப்பிடிப்பிற்கு மத்தியில் அஜித் லண்டன் புறப்பட்டார். இதற்கிடையே புதிய தோற்றத்தில் நடிக்கவிருப்பதால், ஏகே61 படத்தின் இறுதி அட்டவணையைத் தொடங்கும் முன்பே இங்கிலாந்து பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் அஜித். சமீப காலமாக அவர் 'ஏகே 61' படப்பிடிப்பில் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களுடன் அதிக படங்களை எடுத்து வருவதற்கும் இதுவே காரணம்.

    'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் அவரின் தோற்றம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஆனால் படத்தின் க்ளைமாக்ஸுக்கு அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால், அதை வெளியில் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்க அஜித்தும் படக்குழுவினரும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

    கட்டாயப்படுத்திய லோகேஷ் கனகராஜ்... விக்ரம் படத்துக்காக கொள்கையை விட்டுக் கொடுத்த சூர்யா!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏகே 61 படத்தில் அஜித் ஒரு தோற்றத்தில் ஷார்ட் ஹேர் மற்றும் அடர்ந்த தாடியுடன் காணப்படுவார் என்றும், மற்றொரு லுக்கில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'அஜித் 61' படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஜூலை இரண்டாம் பாதியில் புனேயில் தொடங்குகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Ajith

    அடுத்த செய்தி