Home /News /entertainment /

அஜித்தின் ஏகே61 படம் இணையத்தில் லீக் - ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித்தின் ஏகே61 படம் இணையத்தில் லீக் - ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித்

அஜித்

'ஏகே 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் புனேவில் முன்னணி நட்சத்திரங்களுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    அஜித்தின் ஏகே61 திரைப்படத்தின் படங்கள் இணையத்தில் லீக்காகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஐரோப்பாவில் ஒரு மாத காலம் விடுமுறையை கழித்து விட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார் நடிகர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஏகே 61 படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏகே61 படத்தின் இறுதி அட்டவணை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலில் படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் இணைவார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையே 'ஏகே 61' படத்திற்காக போடப்பட்டுள்ள பேங்க் செட் புகைப்படம் தற்போது இணையத்தில் லீக்காகியிருக்கிறது. வங்கி செட்டுக்காக பிரஞ்சு ஸ்டைல் கட்டிடம் இதற்காக எழுப்பப்பட்டுள்ளது. 'ஏகே 61' படத்தின் அடுத்த ஷெட்யூல் புனேவில் முன்னணி நட்சத்திரங்களுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களை கருத்தில் கொண்டு அந்த இடத்தை சென்னைக்கு மாற்ற தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

    திருமணமான 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயான அண்ணாத்த பட நடிகை



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள 'ஏகே 61' படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா மற்றும் அஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. 'ஏகே 61' படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், அந்த போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith

    அடுத்த செய்தி