ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித்தை மீண்டும் இயக்கப் போகிறாரா முருகதாஸ்? ஏகே 63 குறித்து தீயாய் பரவும் தகவல்

அஜித்தை மீண்டும் இயக்கப் போகிறாரா முருகதாஸ்? ஏகே 63 குறித்து தீயாய் பரவும் தகவல்

ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ்

Ajith – AR Murugadoss : நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் – எச்.வினோத் கூட்டணி இணைந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அஜித் படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக தகவல்  ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத நிலையில், ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் – எச்.வினோத் கூட்டணி இணைந்திருக்கிறது. போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

விருதுநகர் சிறையில் குக் வித் கோமாளி புகழ் - வெளியான வீடியோ 

இதனை முடித்துக்கொண்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.  இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் ஏகே 63 படம் தொடர்பாக புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதாவது இயக்குனர் முருகதாஸ் அஜித்திடம் ஏற்கனவே ஒரு கதை சொன்னதாகவும், அதற்கு அஜித் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் உடனான படத்தை முடித்துக் கொண்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் அஜித் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க - முதன்மை கதாப்பாத்திரத்தில் அம்மு அபிராமி நடிக்கும் 'குதூகலம்' 

முருகதாஸ் கடைசியாக தமிழில் தர்பார் என்ற படத்தை இயக்கியிருந்தார். ரஜினி நடித்த இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தீனா படத்திற்கு பின்னர் முருகதாஸுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இருப்பினும் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் இந்த தகவலை திரைத்துறையினர் மறுக்காத நிலையில் இந்த கூட்டணி மீண்டும் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: A.R.murugadoss, Actor Ajith