மோகன்லால் இயக்கத்தில் நடிக்கிறாரா தல?... அஜித் தரப்பு விளக்கம்

அஜித்

மோகன்லால் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக வெளியான தகவலுக்கு சுரேஷ் சந்திரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பரோஸ்’. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று கொச்சியில் தொடங்கியது. சந்தோஷ் சிவன் இசையமைக்கும் இந்தப் படட்துக்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார்.

  பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

  இதுகுறித்து பிரபல செய்தி ஊடகத்துக்கு விளக்கமளித்திருக்கும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் மோகன்லால் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகும் தகவல் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வரும் அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  ‘வலிமை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரமோஷன் பணிகள் அஜித்தின் 50-வது பிறந்தநாள் மே 1-ம் தேதியிலிருந்து துவங்கும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: