• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித்தின் 61-வது பட இயக்குநர் இவரா? கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்

அஜித்தின் 61-வது பட இயக்குநர் இவரா? கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்

அஜித்

அஜித்

அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது.

  • Share this:
    ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து மீண்டும் அதே கூட்டணியுடன் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50% நிறைவடைந்துள்ளது. கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் மீதமிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிகில் படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்து அஜித் உடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    ‘இறுதிச்சுற்று’ படத்தை அடுத்து சூரரைப்போற்று படம் மூலம் சூர்யாவுடன் கூட்டணி அமைத்தார் சுதா கொங்கரா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் சுதா கொங்கரா விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பது உறுதியாகியுள்ளது.



    இந்நிலையில் தற்போது சுதா கொங்கரா அஜித்தின் 61-வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: