விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை - பிரபல இயக்குநர் விளக்கம்

விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை - பிரபல இயக்குநர் விளக்கம்
நடிகர் விஜய்
  • Share this:
விஜய்யின் 65-வது படத்தை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து விளக்கமளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் நடிக்கும் 65-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதையடுத்து பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், சுதா கொங்கரா, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜய் ஞானமுத்து உள்ளிட்டோரின் பெயர்கள் தளபதி 65 படத்துக்கான இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றன.


இந்நிலையில் அஜய் ஞானமுத்துவிடம் தளபதி 65 படத்தை நீங்கள் இயக்குவது உண்மையா என்று கேள்வி எழுப்ப, “இல்லை. இது யார் பார்த்த வேலை என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.டிமாண்டி காலனி , இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அதில் ஏழு வித்தியாசமான கெட்-அப்களில் விக்ரம் தோன்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 2008-ம் ஆண்டு நான் ஒருவரைக் காதலித்தேன்... பிரபாஸ் நட்பு குறித்து மனம் திறந்த அனுஷ்கா!


First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading