ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தியில் வசூலை அள்ளிக் குவிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ – படக்குழுவினர் உற்சாகம்

இந்தியில் வசூலை அள்ளிக் குவிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ – படக்குழுவினர் உற்சாகம்

த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கன், அக்சய் கன்னா, தபு

த்ரிஷ்யம் 2 படத்தில் அஜய் தேவ்கன், அக்சய் கன்னா, தபு

இந்தியில் இந்த படத்தை பூஷன் குமார், குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். அபிஷேக் பதக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் நல்ல வசூலை குவித்து வருகிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மலையாளத்தில் மோகன் லால், மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரிஷ்யம் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் மலையாள சினிமாவை இந்தியாவையே திரும்பி பார்க்கும்படி செய்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

    திரிஷ்யம் ஹிட்டானதை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்தப் படத்தை பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர். இதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்தப் படம் ஹிட்டானது.

    இதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் உருவாகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியானது. அந்த சூழலில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் வேறு வழியின்றி த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஒடிடியில் களம் இறக்கப்பட்டது.

    இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை… பின்னணி காரணங்கள் என்ன?

    முதல் பாகத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் இரண்டாம் பாகம் அமைந்திருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 3ஆம் பாகமும் திரைக்கு வரும் என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, இந்தியில் த்ரிஷ்யம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகி நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்டோரை இந்த பாகத்திலும் நடித்துள்ளார்கள்.

    வெளியான முதல் நாளன்று ரூ. 15.38 கோடி ரூபாயை இந்தப் படம் வசூலித்த நிலையில், மறுநாளான நேற்று வரவேற்பு அதிகரித்து 21 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 2 நாட்களில் மட்டும் த்ரிஷ்யம் 2 இந்தி பதிப்பு 36.97 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    WATCH – ‘தீங்கிரை’ படத்திலிருந்து ‘அவிழாத காலை’ ரொமான்டிக் பாடல்

    இந்தியில் இந்த படத்தை பூஷன் குமார், குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். அபிஷேக் பதக் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியில் கடந்த சில வாரங்களாக எந்தப் படமும் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், த்ரிஷ்யம் 2 படம் வசூலை குவித்து வருகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Bollywood