ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூல் வேட்டையில் த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக்… வார நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்..

வசூல் வேட்டையில் த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக்… வார நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்..

த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர்கள்.

த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர்கள்.

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபாநாசம் படத்தின் 2ஆவது பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் கடந்த வாரம் வெளியாக வசூலை குவித்து வருகிறது. வார நாட்களிலும் நல்ல வசூல் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு பின்னர் பாலிவுட் வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

  பாலிவுட்டில் வெளியான ரன்பிர் கபூரின் பிரமாஸ்திரா, ஆமிர் கானின் லால் சிங் சத்தா, அக்சய் குமாரின் பிருத்விராஜ், ராம் சேது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எந்த படம் வந்தாலும் ஓடாத காரணத்தால் பாலிவுட் வட்டாரம் அதிருப்தியில் காணப்பட்டது.

  இந்த நிலையை விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக் மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  மூவி டைம் : நொடிக்கு நொடி பரபரப்பான காட்சிகள்..! பார்த்தே தீர வேண்டிய த்ரில்லர் படம் ‘The Call'

  கொரோனா பாதிப்பு காரணமாக மலையாளத்தில் உருவான ஒரிஜினல் த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் தியேட்டர் அனுபவத்தை இழந்தார்கள். முதல் பாகத்தை விடவும் திரைக்கதை இரண்டாம் பாகத்தில் கூடுதல் விறுவிறுப்பாக அமைந்தது.

  இந்நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மோகன்லால் கேரக்டரில் அஜய் தேவ்கனும், மீனா வேடத்தில் ஸ்ரேயாவும் நடித்துள்ளனர். மூத்த நடிகர் அக்சய் கன்னா முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார்.

  ' isDesktop="true" id="842318" youtubeid="cxA2y9Tgl7o" category="cinema">

  கன்டென்ட் தரமாக இருப்பதால் த்ரிஷ்யம் 2 படத்திற்கு வார நாட்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஈவனிங் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர் ரசிகர்களின் வரத்து தியேட்டருக்கு அதிகரித்திருப்பதால் பாலிவுட் திரைத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  காயத்திலிருந்து குணமடைந்த பூஜா ஹெக்டே… மகேஷ் பாபு படத்திற்காக தயாராகிறார்…

  கடந்த வெள்ளி முதல் நேற்று வரை இந்தப் படம் ரூ. 75.64 கோடியை வசூலித்துள்ளது. இந்த வாரத்திற்குள் படம் ரூ. 100 கோடி வசூலை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இதில் கமல், கவுதமி முன்னணி கேரக்டரில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Bollywood