ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கைதி இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு!

கைதி இந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு!

அஜய் தேவ்கன் - கார்த்தி

அஜய் தேவ்கன் - கார்த்தி

'போலா' அஜய் தேவ்கனின் 10-வது தென்னிந்திய திரைப்பட ரீமேக் என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கைதி படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

தமிழில் வெளியாக பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்ற ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு ஜனவரி 2022-ல் தொடங்கியது. இதில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு ‘போலா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

சுவாரஸ்யமாக, அஜய் தேவ்கனே இப்படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். இது 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியான தமிழ் திரைப்படமான கைதியின் இந்தி ரீமேக்காகும். "படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பரபரப்பாக ஏற்கனவே தொடங்கிவிட்டது. நினைவில் கொள்ளுங்கள், ரிலீஸ் தேதியும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில்!" என போலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தமிழ்-தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான சம்பவங்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய தமிழ் திரைப்படமான 'கைதி' ஒரு திரில்லர் திரைப்படமாகும். சிறையிலிருந்து வெளியேறிய கத்தி, தனது மகளை சந்திக்க முற்படும்போது இடையில் என்ன நடக்கிறது என்பதே கதை. 'போலா' அஜய் தேவ்கனின் 10-வது தென்னிந்திய திரைப்பட ரீமேக் என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயம். அஜய் தேவ்கன் பிலிம்ஸுடன் இணைந்து இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajay Devgn, Bollywood