Home /News /entertainment /

இந்தி தான் தேசிய மொழி... சர்ச்சையைக் கிளப்பிய அஜய் தேவ்கன் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தி தான் தேசிய மொழி... சர்ச்சையைக் கிளப்பிய அஜய் தேவ்கன் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லவே இல்லை என்றும், தங்கள் மீது இந்தியை திணிக்க முயல வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தி எப்போதும் தேசிய மொழி தான் என்று ட்விட் செய்து சர்சையில் சிக்கி இருக்கிறார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். நெட்டிசன்கள் பலர், அவரது கருத்துக்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் கிச்சா சுதீப் சமீபத்தில் அவருடைய புதிய படத்திற்கான ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய போது, இந்தி இனி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது எனக் கூறினார். அதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

    இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால், நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்தி முன்பும் இப்போதும் இனிமேலும் நமது தாய்மொழியாக தேசிய மொழியாக இருக்கும் என ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

    கலைக்கு மொழி தடையில்லை - அஜய் தேவ்கனுக்கு ரம்யா ஸ்பந்தனா பதிலடி!

    இதற்கு பதிலளித்த கிச்சா சுதீப், தான் பேசியதன் பொருள் வேறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறன். தான் நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை விளக்கிச் சொல்கிறேன் என்று தெரிவித்திருந்தார். புண்படுத்துவது போலவோ, தூண்டும்படியோ, விவாதத்துக்கோ நான் அதைச் சொல்லவில்லை என்றும் விளக்கி இருந்தார்.

    இந்தி திணிப்பு குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கன்னட நடிகர் சுதீப் ட்விட்டரில் காரசார விவாதம்!

    இந்தப் பதிலுக்குப் பிறகு அஜய் தேவ்கன், நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். இந்த விவாதத்தைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் பலர், அஜய் தேவ்கனை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லவே இல்லை என்றும், தங்கள் மீது இந்தியை திணிக்க முயல வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே தனது அடுத்த படத்தின் விளம்பரத்திற்காகவே அஜய் தேவ்கன் இவ்வாறு சர்ச்சையை கிளப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajay Devgan

    அடுத்த செய்தி