முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குழந்தை பிறந்த பின் படப்பிடிப்புக்கு திரும்பிய நடிகை ஸ்ரேயா

குழந்தை பிறந்த பின் படப்பிடிப்புக்கு திரும்பிய நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா

மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் திரைப்படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்திருந்தனர். அஜய்தேவ்கானும், ஸ்ரேயாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை ஸ்ரேயாவுக்கு சென்ற வருடம் குழந்தை பிறந்தது. அதன்பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அவரது முதல் படமாக இந்தி திரிஷ்யம் 2 தயாராகிறது.

2002-ல் சினிமாவில் அறிமுகமான ஸ்ரேயா தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார். தி அதர் என்ட் ஆஃப் தி லைன்  என்ற ஆங்கிலப் படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் 2018 இல் தனது  நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொண்டார். சென்றவருடம் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ராதா என்று குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். குழந்தை பிறப்பு காரணமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த ஸ்ரேயா தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியிருக்கிறார்.

மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் திரைப்படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்திருந்தனர். அஜய்தேவ்கானும், ஸ்ரேயாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இப்போது திரிஷ்யம் 2 திரைப்படத்தின் இந்தி ரீமேக் தயாராகிறது. இதில் அதே வேடங்களில் அஜய்தேவ்கானும், ஸ்ரேயாவும் நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பில் ஸ்ரேயா கலந்து கொண்டார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கோவாவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

Also read... நாய் சேகர் ரிட்டர்ன்சில் வடிவேலின் குழல் ஒலிபெருக்கி ஹேர்ஸ்டைல்!

த்ரிஷ்யம் 2 இந்தி ரீமேக்கை  அபிஷேக் பதக் இயக்குகிறார். போலீஸ் அதிகாரியாக ஆஷா சரத் நடித்த வேடத்தில் தபு நடிக்கிறார். குழந்தை பிறந்த பின் ஸ்ரேயா கலந்துகொண்ட முதல் படப்பிடிப்பு இதுவாகும். அவரது நடிப்பில் ஆர் ஆர் ஆர், நரகாசூரன், சண்டக்காரி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

First published:

Tags: Actress Shriya