பிரிட்டன் க்ரைம் டிவி சீரிஸ் ரீமேக்கில் பிரபல நடிகர்!

பிரிட்டன் க்ரைம் டிவி சீரிஸ் ரீமேக்கில் பிரபல நடிகர்!

அஜய் தேவ்கான்

ஓடிடி தளங்கள் மெல்ல இந்தியாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. 130 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா ஓடிடி தளங்களின் ப்ரியத்துக்குரியதாக மாறியதில் ஆச்சரியமில்லை.

 • Share this:
  ஓடிடி தளங்கள் மெல்ல இந்தியாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. 130 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா ஓடிடி தளங்களின் ப்ரியத்துக்குரியதாக மாறியதில் ஆச்சரியமில்லை.

  தமன்னா, காஜல் அகர்வால், ப்ரியங்கா சோப்ரா, ஸ்ருதிஹாசன், போன்ற முன்னணி நடிகைகள் வெப் சீரிஸ்களில் ஆர்வமாக நடிக்கின்றனர். ப்ரியங்கா சோப்ராவும், ஸ்ருதிஹாசனும் நடித்தது ஹாலிவுட்டில் தயாரான ஆங்கில வெப்சீரிஸில்.

  நடிகர்களில் நவாசுதின் சித்திக், மனோஜ் பாஜ்பாய், சயிப் அலிகன் என திறமையாளர்கள் தொடர்ந்து நடிக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், மகேஷ்பாபு, ராம் சரண், ஜுனியர் என்டிஆர், புனித் ராஜ்குமார், பிரபாஸ், ரஜினி, கமல், அஜித், விஜய், மம்முட்டி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இன்னும் வெப்சீரிஸுக்கு வரவில்லை. பகத் பாசில் இதில் விதிவிலக்கு. இந்த முன்னணி வரிசையில் முதல்முறையாக ஒருவர் வெப்சீரிஸுக்கு வந்திருக்கிறார். அவர் அஜய் தேவ்கான்.

  இந்தியின் முன்னணி நடிகராக இருக்கும் அஜய் தேவ்கான் முதல்முறையாக ஒரு வெப்சீரிஸில் நடிக்கிறார். இது பிரிட்டனில் தயாரான லூதர் டிவி சீரிஸின் இந்திய தழுவல். ஜான் லூதர் என்ற டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் எப்படி மர்டர் கேஸ்களை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மையக்கதை. அதிபுத்திசாலியும், அதி கோபமும், அதீத தொழில் பக்தியும் கொண்ட லூதரின் முரட்டுக்குணம் அவரது டிபார்ட்மெண்டில் எப்போதும் ஒவ்வாமையுடனே அணுகப்படுகிறது. பிரச்சனைகளில் லூதர் தொடர்ந்து மாட்டுகிறார். இந்த எக்ஸென்ட்ரிக் கதாபாத்திரத்தை நடிகர் Idris Elba தனது அருமையான நடிப்பில் உயிர்ப்பித்திருந்தார். இந்த வேடத்தைதான் இந்தியில் அஜய்தேவ் கான் செய்யவிருக்கிறார். லூதர் இதுவரை 5 சீசன்கள் வெளிவந்துள்ளது.

  லூதரின் இந்தி பதிப்பை பிபிசியுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து, டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு செய்ய உள்ளது. இலியானா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெராரி கி சவாரி படத்தை இயக்கிய ராஜேஷ் மபூஸ்கர் இந்த சீரிஸை இயக்குகிறார்.
  லூதர் டிவி சீரிஸை உருவாக்கியவர் நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான நீல் க்ராஸ். நடிகர் எல்பாவுக்கு ஜான் லூதர் கதாபாத்திரம், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் டெலிவிஷன் அவார்ட், கோல்டன் குளோப், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் அவார்ட் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுத் தந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: