Ajay Devgan: இந்தியாவில் ‘ருத்ரா’வாக வெளியாகும் பிரிட்டன் சீரியல் லூதர்!

Ajay Devgan: இந்தியாவில் ‘ருத்ரா’வாக வெளியாகும் பிரிட்டன் சீரியல் லூதர்!

அஜய் தேவ்கான்

இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கான் முதல்முறையாக ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பிரிட்டன் டிவி சீரிஸான லூதரின் அதிகாரப்பூர்வ தழுவல் இது என செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த புதிய வெப் சீரிஸின் பெயரை இன்று அறிவித்துள்ளனர்.

  • Share this:

    முன்னணி நடிகைகள் அளவுக்கு முன்னணி நாயகர்கள் வெப் சீரிஸ்களில் ஆர்வம் காட்டவில்லை. பகத் பாசில் போன்ற ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து வில்லன், குணச்சித்திர வேடங்களில் திறமையை நிரூபித்தவர்களே அதிகம் வெப் சீரிஸில் நடிக்கிறார்கள். அஜய் தேவ்கானின் வரவு அதனை மாற்றலாம்.

    Ajay Devgan British serial Luther will be released as Rudra in India
    ருத்ரா

    பிரிட்டனின் வெற்றிகராமான டிவி சீரிஸ் லூதரின் இந்தி தழுவலில் அஜய் தேவ்கான் நடிக்கிறார். இதற்கு ருத்ரா - தி எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ் என பெயர் வைத்துள்ளனர். மும்பையை மையப்படுத்தி இந்த சைக்கலாஜிகல் க்ரைம் த்ரில்லரின் கதை பின்னப்பட்டுள்ளது.

    பிபிசியுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த வெப் சீரிஸை தயாரிக்கிறது. முக்கியமான வேடத்தில் இலியானா நடித்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் இந்திய வெப் சீரிஸ்களில் இதுவும் ஒன்று. இதன் வெற்றி, மேலும் பல பாலிவுட் ஹீரோக்களை வெப் சீரிஸ் பக்கம் இழுத்துவர வாய்ப்புள்ளது.
    டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இந்த வருடம் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: