கொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய், ஆராத்யா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய், ஆராத்யா
தனது மகள் உடன் ஐஸ்வர்யாராய்
  • Share this:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் முதலில் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் மட்டுமே மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா கடந்த ஜூலை 17-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக நடிகர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.





மேலும் தானும் தனது தந்தை அபிஷேக் பச்சனும் இன்னும் சிகிச்சையிலிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ள அவர் தங்களது குடும்பத்தினர் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் அபிஷேக் பச்சன்
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading