டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான கனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது.

டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
  • News18
  • Last Updated: February 17, 2019, 5:14 PM IST
  • Share this:
தான் டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் குறித்தும், தனது காதல் குறித்தும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான கனா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படத்தை அடுத்து அவரைத் தேடி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில் பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது காதல் குறித்தும், டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் தற்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன். "எனக்கு காதலில் லக் இல்லை. பள்ளிப்பருவத்தில் நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது தான் எனக்கு காதலில் முதல் தோல்வி ஏற்பட்டது. அப்போது எனது தோழியும் என் காதலனுடன் சேர்ந்துகொண்டு என்னை ஏமாற்றினாள். சில ஆண்டுகள் கழித்து மற்றொரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பை விட்டுப் பிரிய வேண்டியதாகிவிட்டது. நான் மிகவும் உணர்வுபூர்வமானவள்.


Actress Aishwarya Rajesh

ஒருவருடன் காதலில் இருக்கும்போது அந்த காதல் முடிந்துவிடக் கூடாது என்று நினைப்பேன். ஆனால் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு அந்த உறவு முறிந்ததும் உடனே இன்னொருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் என்பதே எனக்குத் தெரியவில்லை. என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு நடிகையாக இருந்துகொண்டு காதலிப்பது சிரமம். காதல் மிக அழகான அவசியமான ஒன்றுதான். காதல் ஜோடிகளைப் பார்க்கும் போது எனக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கான காதலருக்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் டேட் செல்ல விரும்பினால் எந்த நடிகருடன் செல்வீர்கள் என்ற கேள்வி ஐஸ்வர்யா ராஜேஷிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் பெயரை கூறியுள்ளார். சுஷாந்த் சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஹீரோவாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலியை பார்க்க சென்ற பிரபல நடிகர், வீடு திரும்ப தாமதமானதால் விபரீதம் - வீடியோ

First published: February 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading