The Great Indian Kitchen: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஹீரோயின் யார் தெரியுமா?

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, வந்தான் வென்றான், பூமரங் போன்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் கண்ணன். சந்தானத்தை வைத்து நகைச்சுவை பொழுதுபோக்கு படமான பிஸ்கோத்தை கடைசியாக இயக்கியிருந்தார்.

    அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள தள்ளி போகாதே படத்தை முடித்ததும், நிமிஷா சஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சராமுடு நடித்த மலையாளத்தின் ஹிட் திரைப்படமான கிரேட் இந்தியன் கிச்சனை தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

    பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ் - தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையை இதில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கண்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: