ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வெரிஃபைடு டிக் கொடுத்திருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த 2004-ல் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். பின்னர் 2012-ல் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் ஐஸ்வர்யா. இதில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
இதைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார் ஐஸ்வர்யா. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் தனுஷ்... மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய வாய்ப்பு?
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
தனுஷின் ட்வீட்டை லைக் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! மீண்டும் இணைய க்ரீன் சிக்னல்?
இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குள்ளும் கணவன் - மனைவிக்குள் வந்திருக்கும் சாதாரண சண்டை தான் வந்துள்ளது எனவும், வேறுபாடுகளை களைந்து அவர்கள் விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
Gearing up for our release on march 17th…admiring my talented heroine @verma_shrasti for a while here ! pic.twitter.com/S4p7enkV4L
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 15, 2022
இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் பிஸியானார். ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ இயக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலையில் பிஸியாகியுள்ள ஐஸ்வர்யா சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு சில தினங்களாக ட்விட்டரில் ஓய்வில்லாமல் இயங்கி வருகிறார். அதில் 1.7 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட அவருக்கு தற்போது வெரிஃபைடு டிக்கை வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aishwarya Dhanush, Dhanush