ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தியில் படம் இயக்குகிறார். படத்தின் டைட்டில் டிஸைனை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் நடிப்பில் 3 என்ற படத்தையும், கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை படத்தையும் இயக்கியுள்ளார். இதில் 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட்டானது. படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இரண்டாவது படம் வை ராஜா சுமாரான விமர்சனத்தையே பெற்றது. படம் ஓடவில்லை. அதன் பிறகு சினிமா சண்டைக் கலைஞர்களை பற்றிய சினிமா வீரன் என்ற ஆவணப் படத்தை எடுத்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து காணாமல் போனார்.
ட்விட்டரில் தனுஷ் பெயர் நீக்கம்... அப்பா பெயரை இணைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக பரஸ்பரம் அறிவித்த நிலையில் மீண்டும் தனது திரைப்பட முயற்சிகளை ஐஸ்வர்யா தீவிரப்படுத்தினார். முதல்கட்டமாக முஸாஃபர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். தமிழில் பயணி என்ற பெயரில் அது வெளியானது.
சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்
இதையடுத்து ஓ சாதி சால் என்ற இந்திப் படத்தை இயக்குகிறார். உண்மையாக நடந்த காதல் கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. கிளவுட் 9 பிக்சர்ஸ் மீனு அரோரா படத்தை தயாரிக்கிறார். பிரிவு அறிவிப்புக்குப் பிறகும் சமூகவலைத்தள புரபைலில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை மாற்றாமலிருந்தவர் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.