ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும் போதும் ரசிகர்கள் அதனை திருவிழா போலவே கொண்டாடி வருகின்றனர். அவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இதையடுத்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இயக்குநர்கள். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, சில தினங்களுக்கு முன்னர் தனது இந்தி பட அறிமுகத்தைப் பற்றி அறிவித்தார்.
Shalini Ajith: 23 ஆண்டு பிணைப்பு... வைரலாகும் ஷாலினி அஜித் ரொமாண்டிக் படம்!
செளந்தர்யா, அஸ்வின் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் இருக்கும் நிலையில் அவர்களின் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் விசாகன் வணங்காமுடி என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் செளந்தர்யா.
Sister selfie …side n slide 😂👭 pic.twitter.com/fW1yob0agd
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 22, 2022
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை, இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.