முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

காத்திருப்பு முடிந்தது... குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி சிங்கிள் பாடல், இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த 2004-ல் நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். பின்னர் 2012-ல் 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் ஐஸ்வர்யா. இதில் தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

இதைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார் ஐஸ்வர்யா. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். அந்த அறிவிப்பில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.

James: புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் வெளியீடு... வரி விலக்கு கோரும் காங்கிரஸ்!

இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் பிஸியானார். ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ இயக்குவதில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழில் இதற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

கார் வாங்குவதில் ஆர்வம் காட்டும் விஜய் டிவி பிரபலங்கள்... லிஸ்டில் இணைந்த மதுரை முத்து!

இந்நிலையில் இந்தப் பாடல் இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகிறது. இதனை ட்விட்டரில் அறிவித்திருக்கும் ஐஸ்வர்யா, “இறுதியாக காத்திருப்பு முடிந்து, நீண்ட 9 வருட இடைவேளைக்குப் பிறகு தமிழில் எனது முதல் சிங்கிள் பயணி நாளை வெளியாகிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கமுடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Aishwarya Dhanush