முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Aishwarya Rajinikanth: இந்த விலகலுக்கு என் மகன்கள் தான் காரணம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

Aishwarya Rajinikanth: இந்த விலகலுக்கு என் மகன்கள் தான் காரணம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயணி என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார் ஐஸ்வர்யா. இதைத் தொடர்ந்து இயக்குநராக பாலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

  • Last Updated :

சினிமாவை விட்டு 7 வருடங்கள் தான் ஒதுங்கியிருந்ததற்கு தனது மகன்கள் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Thalaivar 169: நெல்சன் திலீப் குமாருக்கு வழங்கிய வாய்ப்பை வாபஸ் வாங்கிய ரஜினிகாந்த்?

ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் சாதாரண கருத்து வேறுபாடுகளால் தான் பிரிந்திருக்கிறார்கள் எனவும், விரைவில் இணைவார்கள் எனவும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். இதற்கிடையே இருவரும் தங்களது வேலைகளில் பிஸியானார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பயணி என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார் ஐஸ்வர்யா. இதைத் தொடர்ந்து இயக்குநராக பாலிவுட்டிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

இந்நிலையில் சினிமாவை விட்டு தான் 7 வருடம் விலகியிருந்ததற்கு தனது மகன்கள் தான் காரணம் எனத் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக தான் அந்த இடைவெளியை எடுத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Aishwarya Dhanush