Home /News /entertainment /

போனி கபூரை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... ஏகே61 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!

போனி கபூரை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... ஏகே61 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - போனி கபூர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - போனி கபூர்

அஜித் ரசிகர்கள் 'ஏகே 61' படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று தருமாறு ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்டு வருகிறார்கள்.

    தயாரிப்பாளர் போனி கபூருடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

    தனுஷை பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். சமீபத்தில் 'பயனி' என்ற இசை ஆல்பத்தை இயக்கியிருந்தார். அந்தப் பாடல் பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சமீபத்தில் மும்பைக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான போனி கபூரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    சமூக வலைதளங்களில் போனி கபூருடனான படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "அன்புள்ள போனிகபூர் மாமா உங்களுடன் இன்று மாலை காபி அருந்தியதில் மகிழ்ச்சியாக இருந்தது. பழைய காலங்களையும், பாப்பி அக்காவையும் நினைவு கூர்ந்து, சுவாரஸ்யமான வேலைகளைப் பற்றி விவாதித்தோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ஐஸ்வர்யா - போனி கபூர் இருவரிடமிருந்தும் ஏதேனும் ஆச்சரியமான அறிவிப்பு வரக்கூடும் என்று ரசிகர்கள் கருதுவதால், இது சாதாரண சந்திப்பு அல்ல என்று தெரிகிறது, என்கின்றனர் ரசிகர்கள். இதற்கிடையே, அஜித் ரசிகர்கள் 'ஏகே 61' படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று தருமாறு ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்டு வருகிறார்கள். அஜித்தின் 61-வது படத்தில் இருந்து நீண்ட காலமாக எந்த அப்டேட்டும் வராததால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காமெடி நடிகர் திடீர் மரணம்



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர, நாட்டிலேயே அதிக வரி செலுத்துபவர் என்ற விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை வழங்கியுள்ளது. ரஜினி சார்பில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நேற்று மும்பையில் அந்த விருதை பெற்றார். '3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Rajinikanth

    அடுத்த செய்தி