முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லைக்ஸை குவிக்கும் வீடியோ!

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லைக்ஸை குவிக்கும் வீடியோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் மிகுந்த ஐஸ்வர்யா, அது தொடர்பான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது ஒர்க் அவுட் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் இது கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடும், அதனால் ஏற்பட்ட தற்காலிக பிரிவு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு ஆதி - நிக்கி கல்ராணியின் எமோஷனல் போஸ்ட்!

இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பிலும், ஐஸ்வர்யா தனது இயக்கத்திலும் பிஸியானார்கள். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியதோடு, அடிக்கடி படங்களையும் பகிர்ந்து வருகிறார். புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் மிகுந்த ஐஸ்வர்யா, அது தொடர்பான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சன் டிவி-யிலிருந்து விலகி விஜய் டிவி-க்கு வந்த சீரியல் ஹீரோ!

இந்நிலையில் சமீபத்தில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. அதில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ நெட்டிசன்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.

First published:

Tags: Aishwarya Dhanush