ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணு விஷால்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணு விஷால்…

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ரஜினிகாந்த்

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ரஜினிகாந்த்

இந்த திரைப்படத்தில் முதலில் அதர்வாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. அவர் இடம்பெறாதது ஏன் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லைகா தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  மேலும் தன்னுடைய மகள் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான பூஜை நாளை சென்னையில் நடைபெறுகிறது. அதில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பட குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

விஜய்யின் ஹிட் பாடல்களின் தொகுப்பு.. வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாட்டுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு!

இந்த திரைப்படத்தில் முதலில் அதர்வாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன. ஆனால் அவர் அதிக சம்பளம் கேட்டதன் காரணமாக தற்போது விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ. 450 கோடி வசூலை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவிலேயே ஒட்டுமொத்த அளவில் அதிக வசூலைப் பெற்ற ரஜினியின் 2.0 படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்தது.

WATCH - நடுங்க வைக்கும் திகில்.. மிரள் படத்தின். ட்ரெய்லர்.. வீடியோ!

தற்போது லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கமல் நடித்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். முதல் பாகத்தை இயக்கிய ஷங்கர் இந்தியன் 2வையும் இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Published by:Musthak
First published:

Tags: Actor Vishnu Vishal, Aishwarya Rajinikanth, Rajinikanth