முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ்!

மகன்களுடன் ஐஸ்வர்யா தனுஷ்

மகன்களுடன் ஐஸ்வர்யா தனுஷ்

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தங்கள் மகன் யாத்ராவை ஊக்கப்படுத்த பள்ளிக்குச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. 

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜ் ரஜினிகாந்த் ஆகியோர் திருமண வாழ்வில் இருந்து பிரிய  முடிவெடுத்தனர்.  அதற்கான அறிவிப்பை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் சமூக வலைதளங்களில் அறிக்கை மூலமாக அறிவித்தனர்.  அவர்களின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் இருவருடனும் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களுடைய மூத்த மகன் யாத்ரா, அவர் படிக்கும் பள்ளியில் விளையாட்டு அணிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது!

அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சேர்ந்து வாழ வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Aishwarya Dhanush