Home /News /entertainment /

கணவரை பிரிந்த பிறகு, இந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

கணவரை பிரிந்த பிறகு, இந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஏற்கனவே யோகா மற்றும் உடற்பயிற்சியில் காதல் கொண்ட ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்த பிறகு இன்னும் அதனை அதிகமாக்கியிருப்பதாக தெரிகிறது.

    கணவரை பிரிந்த பிறகு உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர் இது கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடும், அதனால் ஏற்பட்ட தற்காலிக பிரிவு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

    ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!

    இதையடுத்து தனுஷ் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளிலும், ஐஸ்வர்யா தான் படம் இயக்கும் வேலைகளிலும் பிஸியானார்கள். முன்னதாக பயணி என்ற மியூசிக் வீடியோவை இயக்கியிருந்த ஐஸ்வர்யா, தற்போது இந்தியில் ஒரு படம் இயக்கக் கமிட்டாகியுள்ளார்.

    ஏற்கனவே யோகா மற்றும் உடற்பயிற்சியில் காதல் கொண்ட ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்த பிறகு இன்னும் அதனை அதிகமாக்கியிருப்பதாக தெரிகிறது. பிரிவினால் நேர்ந்த அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் ஐஸ்வர்யா இவ்வாறு உடற்பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.



    சூர்யாவின் உள்ளம் உருகுதைய்யா பாடல் வீடியோ வெளியீடு!

    உடற்பயிற்சியின் போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மறக்காமல் பகிர்ந்துக் கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ”ஆரோக்கியமே உங்களின் மிகப்பெரிய செல்வம், சுத்தமாக சாப்பிடுங்கள். நன்றாக தண்ணீர் குடியுங்கள்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    .



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush

    அடுத்த செய்தி