Home /News /entertainment /

பெண்களை நேசியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகளிர் தின ஸ்பெஷல் கொண்டாட்டம்!

பெண்களை நேசியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகளிர் தின ஸ்பெஷல் கொண்டாட்டம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

மகளிர் தினத்தை செவிலியர்களுடன் கொண்டாடி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகளிர் தினத்தை செவிலியர்களுடன் கொண்டாடியுள்ளார்.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    குக் வித் கோமாளி புகழை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல கிரிக்கெட் வீரர்!

    இந்நிலையில் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார் ஐஸ்வர்யா. அதோடு தனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் ப்ரீத்திகா சாரிக்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.




    பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?

    இதற்கிடையே மகளிர் தினத்தை செவிலியர்களுடன் கொண்டாடி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “என்னை கவனித்துக் கொள்ளும் மிக அழகான செவிலியர்களுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறேன். எனது மகன்கள் அவர்கள் வாழ்வில் வரும் ஒவ்வொரு பெண்ணையும், மதிக்கக் கற்றுக்கொடுக்கிறேன், ஏனெனில் அவர்கள் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமாக இருக்கிறார்கள்... உங்கள் வாழ்க்கையில் பெண்களை நேசியுங்கள். வாழ்க்கை உங்களை மீண்டும் நேசிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்க
    Published by:Shalini C
    First published:

    Tags: Aishwarya Dhanush

    அடுத்த செய்தி