Home /News /entertainment /

Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

Dhanush Aishwarya: பெருமைக்குரிய மனைவி எனக் குறிப்பிட்ட 3 மாதத்திற்குள் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Dhanush Aishwarya Divorce: ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பெருமையாக பதிவிட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த பிரிவு செய்தி வந்துள்ளது.

    நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக நேற்றிரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர். தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்ததற்கான காரணத்தை ஆராய வேண்டாம் எனக் குறிப்பிட்டாலும், ‘தனிநபர்களாக அவர்களை சிறப்பாகப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

    தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கையில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

    இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.

    Dhanush Aishwarya: கமல் ஹாசன் முதல் தனுஷ் வரை... அதிர்ச்சியில் ஆழ்த்திய விவாகரத்து மற்றும் உறவு முறிவு கதைகள்!

    இந்த செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பெருமையாக பதிவிட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த பிரிவு செய்தி வந்துள்ளது. அக்டோபரில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் இருவரும் புதுதில்லியில் நடந்த மதிப்புமிக்க தேசிய விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொண்டனர். அந்த விழாவில் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார், அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகர் பிரிவில் தேசிய திரைப்பட விருதை வென்றார்.

    இதையும் படிங்க - Dhanush: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?




    அக்கா ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த செளந்தர்யா ரஜினிகாந்த்

    அக்டோபர் 25 அன்று, ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் ரஜினி மற்றும் தனுஷ் இருவரின் படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "அவர்கள் என்னுடையவர்கள் ... இது வரலாறு 💜💜#பெருமை மகள்❤️ #பெருமை மனைவி" என்று அந்தப் பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தனுஷ் இடம்பெற்ற அவரது கடைசி பதிவு ஏப்ரல் 2021-ல் கர்ணன் திரைப்பட ரிலீஸின் போது இருந்தது. மறுபுறம் தனுஷ், தனது சமூகவலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள் குறித்த பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். அவரது பதிவுகளில் ஐஸ்வர்யாவை காண முடியவில்லை.




    தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ல் திருமணம் செய்துக் கொண்டனர். அவர்கள் 2006-ல் தங்கள் முதல் மகன் யாத்ராவை பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்கா பிறந்தார். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த ’3’, பிளாக் காமெடி ‘வை ராஜா வை’ ஆகியப் படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா. இதற்கிடையில், தனுஷ் கடைசியாக 2021 டிசம்பரில் வெளியான அட்ராங்கி ரே என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush

    அடுத்த செய்தி