ஆக.22 விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம்!

பூமிகா

திட்டம் இரண்டு போலவே இதுவும் நாயகி மையத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு திரைப்படம் நேற்று நேரடியாக சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள பூமிகா ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் இன்னும் திறக்கவில்லை. அதனால், ஓடிடியில் படங்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. பல திரைப்படங்கள் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகின்றன. விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக சன் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு நேற்று நேரடியாக சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் நடித்துள்ள பூமிகா ஆகஸ்ட் 22 விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து சோனிலிவ் ஓடிடி தளத்திலும் படத்தை வெளியிடுகின்றனர். இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படமாகும். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் கார்த்திக் சுப்பாராஜ் இதனை தயாரித்துள்ளார்

Also read... படம் சொல்லும் கதை - 56 வருடங்களை நிறைவு செய்த திருவிளையாடல்!

ரதீந்திரன் பிரசாத் பூமிகாவை இயக்கியுள்ளார். படம் குறித்து பேசுகையில், அவர் இதுவொரு மிஸ்ட்ரி த்ரில்லர் என குறிப்பிட்டார். திட்டம் இரண்டு போலவே இதுவும் நாயகி மையத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: