ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம்... விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம்... விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!
திட்டம் இரண்டு ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக ‘திட்டம் இரண்டு’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சிக்ஸர் என்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டுடியோஸின் வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி என்ற குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார்.


மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டு உருவாக இருக்கும் இந்தப் படத்துக்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாகவும், ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.










First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading