நடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

”உறவு என்பது நான் மிகவும் போற்றக்கூடிய ஒன்று. எனது கடந்த கால உறவுகள் எதுவும் சில மாதங்கள் மட்டுமே இருந்தது கிடையாது”

நடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
ஐஸ்வர்யா ராஜேஷ்.
  • News18
  • Last Updated: May 22, 2019, 4:21 PM IST
  • Share this:
என்னுடைய சக நடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை, அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

காக்கா முட்டை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், SK 16 என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டார் என்றும் விரைவில் இவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து விளக்கமளித்திருந்த அவர், ‘நான் காதலிப்பதாக செய்திகள் பரவி வருவதை கேள்விப்பட்டேன். தயவு செய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன். சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

தற்போது இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நான் காதலிப்பதாக எழுந்த வதந்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆரம்பித்தது என நினைக்கிறேன். அதைப் புறக்கணித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது பெரிதாகிவிட்டது.நான் யாருடனாவது வெளியில் சென்றபோது, யாரோ அதைப் பார்த்து வதந்தியை உருவாக்கி இருக்கலாம். என் சக நடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை. அனைவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்கிறது. அனைவரும் எனக்கு நல்ல நண்பர்கள். யாரையும் காதலிக்க எனக்கு நேரமில்லை. அவ்வாறான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை.

உறவு என்பது நான் மிகவும் போற்றக்கூடிய ஒன்று. எனது கடந்த கால உறவுகள் எதுவும் சில மாதங்கள் மட்டுமே இருந்தது கிடையாது. எல்லாமே நீண்ட நாட்கள் இருந்தவை” என்று கூறியுள்ளார்.

தன்னிகரில்லா ‘தல’ அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

First published: May 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading