Home /News /entertainment /

ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் ஷூட்டிங் நிறைவு…

ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் ஷூட்டிங் நிறைவு…

ஜமுனா படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ்

ஜமுனா படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ்

Driver Jamuna Movie : டிரைவரின் வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதாக டிரைவர் ஜமுனா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிசேக் குமார், ராஜேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் முதன்மை கேரக்டரில் நடிக்கும் டிரைவர் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    போல்டான கேரக்டர்களை தேர்வு செய்யும் நடிகைகளில் ஒருவராக ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளார். வட சென்னை படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றிருப்பார்.

    இந்நிலையில் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்து வந்தார். இதில் அவருக்கு  முதன்மை கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த சிலமாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க - The Gray Man பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்கள் ரூசோ பிரதர்ஸ்

    இதுதொடர்பான புகைப்படம் ஒன்று படக்குழுவினரால் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.



    வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் நீண்ட இடைவேளைக்கு பின்னர் டிரைவர் ஜமுனா படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    டிரைவரின் வாழ்க்கைப் பயணத்தை விவரிப்பதாக டிரைவர் ஜமுனா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிசேக் குமார், ராஜேஷ் உள்ளிட்டோர்  இடம்பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க - ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றது எப்படி? விவரிக்கும் தனுஷ்

    கோகுல் பெனாய் ஒளிப்பதிவை மேற்கொள்ள ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரைவர் ஜமுனா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Aishwarya Rajesh

    அடுத்த செய்தி