முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இது தீட்டு, இவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

இது தீட்டு, இவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடவுள் எல்லாருக்கும் ஒன்று தான், ஆண் - பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்குக் கிடையாது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகியுள்ளது. இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆண் - பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு இல்லை. என் கோயிலுக்கு அவர்கள் வரலாம், இவர்கள் வரவேண்டாம் என எந்த கடவுளும் சொல்லவில்லை. சில சட்டங்கள் தான் அதை உருவாக்கியிருக்கிறது.

பலத்த காயத்திலிருந்து குணமடைந்து வருகிறேன்... விஜய் ஆண்டனி ட்வீட்!

சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை. இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நான் சொல்வேன். பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரவில்லை என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aishwarya rajesh