Aishwarya Rajesh: புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh: புஷ்பா  படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

புஷ்பாவில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

  • Share this:
    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா படத்தில் அவரது சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் புஷ்பா ராஜ் - படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திர பெயர் - அறிமுகம் என்று ஒரு டீஸரை வெளியிட்டனர். பாகுபலி உள்ளிட்ட அனைத்துப் படங்களின் டீஸர் சாதனையையும் புஷ்பா உடைத்தது. அத்தனை அமர்க்களமான ஆக்‌ஷன் டீஸராக அது இருந்தது. காரணம், இயக்குநர் சுகுமார். படத்தை பிரேம் பை பிரேம் இழைத்து உருவாக்குவது சுகுமாரின் ஸ்டைல்.

    புஷ்பாவில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்குப் படம். இவர்கள் தவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில் என பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசை.

    இந்நிலையில் புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இது படத்தில் வரும் முக்கிய வேடம். அதனால், திறமையான நடிகையாக தேடி, இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷை தேர்வு செய்துள்ளனர். கொரோனா தீவிரமாகியுள்ள நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் படப்பிடிப்பு என்ற கணக்கில் ஹைதராபாத்தில் புஷ்பா படப்பிடிப்பு நடந்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: